இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ...உண்மையான வலைபூவிற்கு திரும்பி செல்ல வீட்டிற்கு செல் பொத்தானை கிளிக் செய்யவும்..... முக்கிய செய்தி Group 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் புதிய சிக்கல் தனக்கு மற்றவரை காட்டிலும் 95 வினாக்கள் குறைவாக வந்ததாக ஒருவர் தொடர்ந்த வழக்கால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்  

தங்களின் மேலான கருத்துகளை பதிவு செய்யுங்கள்..

Guestbook

Friday, August 17, 2012

நாமும் பங்கேற்போம் இந்த வெற்றி சமூதாயத்தில்.. தன்னலம் இன்றி செயல்பட்டால் எண்ணம் போல் வாழ்வு சிறக்கும்!


ஒரு தனிமனிதனால் அனைத்தினையும் அறிந்து வைத்திருக்க முடியாது..

இவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகளும்... தனித்திறன்களும் உள்ளன..

இதனை பயன்படுத்திதான் பல TNPSC மற்றும் TET இது போன்ற பல தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மாணவர்களிடமிருந்து பணம்பார்கின்றனர்..

L.K.G முதல் பட்டம் பெறுவது வரை பணம் கொடுத்து படித்த நாம் வேலை வாங்க கூட போட்டித் தேர்வுகளுக்கு  பணம் செலுத்துவது என்பது நமது அறியாமையைதான் காட்டுகிறது.


ஒருங்கிணைப்பு என்பதும் , குழு மனப்பான்மையும் இருந்தால் நாம் இவ்வகையான போட்டித் தேர்வுகளில் சாதித்திட முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எப்படி என்கிறீர்களா? ஒரு பயிற்சி மையத்திற்கு சென்று நீங்கள் பயிற்சி பெற்றால் என்ன கற்பிப்பார்கள்? துறை வாரியாக ஆசிரியர்கள் வந்து முக்கிற கருத்துகளை போதிப்பார்கள் இல்லையா?

அந்த முக்கிய கருத்துக்கள் உங்கள் துறை சார்ந்ததாக இருந்தல் உங்களுக்கு எளிமையாக இருக்கும் ... வேறொரு துறையினருடையது என்றால் கடினம் தானே... அதுதான் விடயம்..

இங்கே நீங்கள் உங்கள் துறை மற்றும் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட துறை சார்ந்த பாடக்குறிப்புகளையும் வினாவிடைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்..

கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பங்களிப்பினை அளிக்க தொடங்கலாம்... சில வாரங்களிலேயே அருமையான புத்தகங்கள் நம்மால் தயாராகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை..

 இயற்பியல் துறை சார்ந்த பாடக்குறிப்பு /வினாக்களை தொகுக்க இங்கே கிளிக் செய்யவும்.

வேதியியல் துறைசார்ந்த பாடக்குறிப்புகள்/ வினாவிடைகளை தொகுக்க ...

தாவரவியல் சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க..


விலங்கியல் துறை சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...

கணிதவியல் துறைசார்ந்த படக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...

அரசியல் துறை சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...

பொருளாதாரம் மற்றும் வணிகவியல் சாரந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க..

வரலாறு துறை சார்ந்த பாடக்குறிப்புகள் மற்றும் வினாவிடைகளை தொகுக்க...

புவியில் துறை சார்ந்த வினாவிடைகள் மற்றும் பாடக்குறிப்புகளை தொகுக்க...


பொது அறிவு சார்ந்த அனைத்தினையும் தொகுக்க...        



இந்த ஒரு அருமையான எண்ணத்திற்கு சொந்தக்காரர் திரு. வெங்கட்ராமன் அவர்கள்.. https://www.facebook.com/M.VENKATESAN.MSC.MPHIL


மேலும் பல புதிய TNPSC கருத்துக்களுக்கு https://www.facebook.com/groups/TNPSC/353195458093442/?comment_id=353409934738661&notif_t=group_comment_reply


TNPSC சார்ந்த வலைதைளம்..


Thursday, August 16, 2012

460 வேளாண் அலுவலர் பணியிடங்கள்..


முந்தைய ஆண்டு தேர்வு வினாத்தாள்கள்


Group 2 answer key for GK

group 2 answer key for GT

e-books free download


இலவசம்...இலவசம்... இலவசம்... மின்னியல் புத்தகங்களை இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய கட்டணம் ஏதும் இல்லை..  

புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்குகளை சொடுக்கவும்... மேலும் அது உங்களை அழைத்து செல்லும் வலைபக்கத்திற்கு சென்று அங்கிருந்து facebook log-in செய்வதன் மூலமாக புத்தகங்களை எளிமையாக download செய்துக் கொள்ளலாம்...


 sura publication book fine for clear notes

Pudhiya Thalaimurai Kalvi books 

General Books to read

Science Study Materials 

Child Development and மேம்பாடும்

Govt Model Question Paper with answer

Maths Study Materials 

English Study Materials 

Tamil Study Materials

TNPSC Group 4 material fine

குடிமையியல் mp3 பதிப்பு

அறிவியல் mp3 பதிப்பு

தமிழ் mp3 பதிப்பு



மேலும் மின்னியல் புத்தகங்களை சுருங்கிய வடிவில் பெற

 என்னை https://www.facebook.com/jackn.nath எனும் இந்த முகபுத்தக பக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் என் மின் அஞ்சல் முகவரி jagan.nathan801@gmail.com
   Open a popup window Guestbook

Saturday, July 14, 2012

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடைகள் B மற்றும் C வகை வினாத்தாள்களுக்கு

கடந்த சூன் மாதம் 13 ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விடைகள் 85 % சரி என்று ஊகிக்கப்பட்டது... பி மற்றும் சி வினாத்தாள் களுக்கானது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது இதனை கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பார்த்து பயன் பெறுங்கள். 

 

விடைகளை காண இங்கே கிளிக் செய்யவும்...

Sunday, July 8, 2012

tnpsc group 4 answers 2012


தமிழ் - TNPSC ஆல் வெளியிடப்பட்டது
Tnpsc Group 4 Answekeys
 GT_07_07_2012_opt பொது அறிவு - TNPSC ஆல் வெளியிடப்பட்டது new one GK_opt



English - TNPSC ஆல் வெளியிடப்பட்டது GROUP-4-2012-GE



        வேறுவகையான வினாத்தாள் - எனக்கு அளிக்கப்பட்டது- TNPSC ஒப்பீட்டு விடைகள் சரியானவை என்று சான்றளிக்கப்படுகிறது என்னால் அனுமானங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட விடைத் தொகுப்பு - TNPSC மூலம் வெளியிடுவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை... இதில் பல தவறானவையாக இருக்கலாம்.. ஆனால் மேலே Pdf வடிவில் உள்ளவை சரியானவை.

 1.       90% ஓங்கு தன்மை 10 % ஒடுங்கு தன்மை
2.       WHO – உலக சுகாதார நிறுவனம்
NPCB – தேசிய பார்வை நோய்க கட்டுப்பாட்டுத் திட்டம்
NLEP – தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டம்
MAB   - மனிதனும் உயிர் கோளமும்
3.       பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் – கேரளா
4.       கிரின்பார்க் எதற்கு சிறப்பு -  கான்பூர் உ.பியின் கிரிக்கெட் மைதானம்
5.       மைக்ரோசாப்ட் எக்ஸெல் – creating Charts ( or ) Documents
6.       புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை – ஓதங்கள்
7.       Hockey –சாய்னா நெய்வால் (தவறான பொருத்தம் )
8.       களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப் பயன்படுத்தப்படுவது – படிகாரம் (Potash Alum)
9.       காரணம் தவறு ஏனெனில் அடர்த்தி அதிகமிலிருந்து அடர்த்த குறைந்ததிற்கு நீர்மம் எதிர் சவ்வூடு பரவல் மூலம் செல்ல வேண்டும்
10.   வெய்ன் ருனி – இங்கிலாந்து ஃ  ரோனால்டோ – நெதர்லாந்து ஃ மரடோனா – அர்ஐன்டினா ஃ ரோனால்டின்ஷோ –பிரேசில் (கால்பந்தாட்ட வீரர்கள் )
11.   ஒலிம்பிக் கொடியில் இருந்து இந்திய பெருங்கடலில் அமையாதவை – ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா
12.   2012 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கைப்பேசி , கணிணி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை என்பது தவறு.
13.   நீதியரசர் பி.வி. ரெட்டி – 19 ஆவது நீதிக்குழுவின் தலைவர் ( நீதி என்பது நிதியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது வினாத்தாளில்)
14.   இந்திய ரிசர்வ் வங்கியின் பணி – தனி நபருக்கு கடன் வழங்குவது அல்ல
15.   பெர்சனாலிட்டி Harmone – ஆக்ஸிடாக்சின்
16.   குறுகிய கோள் – புளுட்டோ
17.   இந்தியாவின் முதன்மை ஆற்றல் மூலங்கள் – நிலக்கரி லிக்னைட் எண்ணெய் மற்றும் வாயு ( மின்சாரம் முதன்மை ஆற்றல் அல்ல எனவே விலக்கவும்)
18.   இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது ( இணைய தேடுதல்களில் கிடைத்த முடிவின் படி இது 6 மடங்கு அதாவது சூரியனுடையது 10, 340 டிகிரி F..,. ஆனால் மின்னலில் இது 53,540டிகிரி F.)
19.   இயல்பான இரத்த குளுகோஸ் அளவு - 80-12 மில்லி கிராம் / 100 மிலி.
20.   பிளத்தல் – பாக்டீரியங்களிலும் ஃ மொட்டுகள்  - ஈஸ்டுகளிலும் ஃ துண்டாதல் – ஆல்காகளிலும் ஃ மகரந்த சேர்க்கை – பூக்கும் தாவரங்களிலும் நடைபெறும் இனப்பெறுக்க முறை ஆகும்.
21.   திருமுறைகளை தொகுத்தவர் – நம்பியாண்டார் நம்பி
22.   ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகள் – விடை அறியப்படவில்லை
23.   இனியவை நாற்பது – பூதஞ்சேத்தனார்
24.   புதுக்கவிதைக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் வைரமுத்து
25.   தொல்காப்பியம் குறிப்பிடும் மெய்பாடுகிளின் எண்ணிக்கை – 8 (ஒன்று குறைவு)
26.   பாரதியார் கூறாத தொடர் – தமிழன் என்றொரு இனம் உண்டு ( கூறியவர் கவிமணி தேசிய விநாயகம் )
27.   மனிதரின் குணங்களில் மிகவும் உயர்ந்து  கொள்ளெனக் கொடுத்தல் ( அதாவது முன்வந்து கொடுத்து உதவுதல் )
28.   திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் – எல்லீசு
29.   பொருந்தாதது – விடலை ( இது ஆண் பருவத்திற்கான பருவம் )
30.   செயகாந்தன் எழுதியது – பாரிசுக்கு போ
31.   உலக சுகாதார நிறுவனம் – ஜெனிவா ஃ பெண்கள் காப்பகம் – நியூயார்க் ஃ UNESCO – பாரிசு ஃ பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி – ரோம்
32.   நிதிக்குழுவின் தலைவர் – பிரதமர்
33.   கால வரிசைபடி பிரதமர்கள் – லால் பகதூர் ஃ சரண்சிங் ஃ வி.பி.சிங் ஃ சந்திர சேகர்
34.   இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்
35.   குடியரசு தலைவருக்கு இந்தி பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை
36.   இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி
37.   நுகர்வு என்ற பட்சத்தில் அபரிகரக – எது தேவையோ அதை மட்டும் பூர்த்தி செய்தல் ( இது ஜைண மதத்தின் சித்தாந்தம் )
38.   காஞ்சி கைலாசநாதர் கோவில் – முதலாம் நரசிம்மவர்மன்
39.   எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டும் என்றவர் – தாயுமானவர்
40.   விறகு – வன்தொடர் குற்றியலுகரம் ( ற் – வன்)
41.   பொழுது போக்குக்கு செலவிடு் தொகை – 1960
42.   10 சதவிகித தள்ளுபடியில் விற்பனை இலாப சதவிகிதம் – 12 சதவிகிதம் ( 10 சதவிகிதம் என்பது தவறான அனுமானம்)
43.    1224 கணக்கிடப்பட்ட விடை
44.   அலுமினோ வெப்ப ஒடுக்கியில் அலுமினியத்தின் பங்கு – ஒடுக்கி
45.   நன்கு தூலாக்கப்பட்ட நிக்கல் – ஒடுக்க வினை காரணி ஃ அமிலங்கலந்த பொட்டாசியம் டை குரோமைட் – ஆக்ஸிஜனேற்றி ஃ எலக்ட்ரான் இழத்தல் – ஆக்ஸிஜனேற்றம் ஃ எலக்ட்ரான் ஏற்றல் – ஒடுக்கம்
46.   பசுந்தாள் உரம் – சணப்பை மற்றும் கொத்தவரை
47.   எதிர்மின்வாயில் – வெள்ளி கரண்டி
48.   ஆக்ஸிஜனேற்றத்தில் எலக்ட்ரான் இழத்தல் நடைபெறுகிறது
49.   ஜெர்மானியம் – மின் கடத்தி
50.   ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் – வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது சரியான பொருத்தம்
51.   மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி – அட்ரினல்
52.   கண் லென்சின் ஒளி புகாத் தன்மை – கண்புரை (cataract)
53.   தேனில் மூலக்கூறில் – கொழுப்பும் வைட்டமினும் இல்லை… எனவே இரண்டு விடைகள் தவறு… இரண்டு சரி ( இது சந்தேகத்திற்குரிய கேள்வி)
54.   மரபியல் குறைபாடு நோய்களை அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் தடுக்க உதவுவது – கரு செல் ஜீனாக்க சிகிட்சை முறை
55.   மரங்களை வெட்டுவது – சூழியல் மண்டலத்தினை பாதிக்கும் ஆனால் அதிக உணவினை கிடைக்க செய்யாது.
56.   கார்க் லென்சில் தாவர செல் அறைகளை கண்டவர் – இராபர்ட் ஷீக்
57.   ஒளிச்சேர்க்கை நடைபெற தேவையான முக்கிய பொருள் – சூரிய ஒளிஃ பசுங்கணிகம் ஃ கார்பன்டை ஆக்ஸைடு ஃ நீர் ஆகியன மட்டும்
58.   கத்தரி – பெர்ரி ஃ ஆப்பிள் – போம் ஃ பட்டாணி – லெக்யூம் ஃ வெண்டை – அறை வெடிகனி
59.   சுவாச தல பொருட்கள் – வைட்டமின்கள் தவிற மற்றவை.
60.   C மாணவர் திரும்பி இருக்கும் திசை கிழக்கு
61.   தார் பாலைவனம் இந்தியா எனவே விடை 4312 என அமைய பெற்றது
62.   சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது என்பது தவறான விடை… 6 ஆம் இடத்தில் தான் அமைந்துள்ளது.
63.   ஏலகிரி வேலுரிலும் ஃ கொல்லிமலை நாமக்கலிலும் ஃ செஞ்சி திருவண்ணாமலையிலும் ஃ கல்வராயன் செஞ்சியிலும் என பொருத்த வேண்டும் … ஃ ஆனால் ஃ செஞ்சி  - விழுப்புரம் மாவட்டதில் உள்ளது என்பதால் இதில அமைந்துள்ள விடைகள் தவறு.
64.   வட கிழக்கு பருவ காற்று என்பதே சரி… அதாவது இரண்டாவது.
65.   இரண்டு சரி ( ஒன்றாவது இமாசல் தொடர் பற்றிய தகவல் சரியாக தெரியவில்லை)
66.   ஆஸ்திரேலியாவிற்கு கங்காரு என்பதால் மற்றவை பற்றி கவலை இல்லை ( 3412 விடை )
67.   இசை சராசரி கணக்கு விடை அறியப்படவில்லை
68.   179-180-181 ( அடுத்தடுத்து வரும் மூன்று மதிப்புகளின் கூடுதல் 540)
69.   சமவாய்ப்பு சோதவை விடை அறியப்படவில்லை
70.   5பெருக்கல் 6 வகுத்தல் 15 பெருக்கல் 14
71.   காலமுறைபடி வரிசை படுத்தல் – பழைய ஃ இடைக் கற்காலம் ஃ புதிய கற்காலம் ஃ செம்பு காலம்
72.   முதல் அணுசக்தி நிலையம் 1956 இல் தொடங்கப்படவில்லை எனவே பாபா தலைமையில் என்பது மட்டும் சரி.
73.   நீதிக்கட்சி – தியாகராய செட்டியார் ஃ தேவதாசி முறை – முத்துலட்சுமி ரெட்டி ஃ வைக்கம் வீரர் – பெரியார் ஃ வீரத்தமிழன்னை – தருமாம்பாள்.
74.   பேஷ்வா – டெல்லி என்பது சரியாக பொருந்தவில்லை
75.   அனைத்தும் சரியாக பொருந்துகிறது… (பொருந்தாதது என்று எதுவுமில்லை எனவே இது தவறான ஒன்று )
76.   இந்திய சங்கம் – தாதாபாய் நௌரோஜி என்பது சரியாக பொருந்துகிறது
77.   சரியாக பொருந்தாதது – கலோனஸ் போர்ப்ஸ் நான்காம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்பது (ஊகம் மட்டுமே)
78.   அசாம் – ஜீம் ஃ ஒரிசா – பொடு ஃ ஆந்திரா ஃ மாசான் ஃ கேரளா – பொன்னம்
79.   தற்போதைய தலைமுறை – 5 ஆம் தலைமுறை ( இதை கொண்டே மற்றதை கணித்து விடலாம் ) 3142 என்று.ஷ
80.   ரோட்டன் முறை – கரும்பு ( சில பகுதிகளில் நெல்லுக்கும் இது பொருந்தும் )
81.   40 வாட்ஸ் குழல் விளக்கு 0.2 ஆம்பியர் ( 40 ஐ வீட்டிற்கு வரும் 220 ஓல்டால் வகுக்க வேண்டும் )
82.   தும்பா – திருவனந்தபுரத்தில அமைந்துள்ளது
83.   நேர்முக வரி அல்லாதது – விற்பனை வரி
84.   3142 (அணுமான விடை )
85.   வேளாண் ஆராய்ச்சி மையம் – கர்சன் பிரபு காலத்தில்
86.   வங்க பிரிவினை சார்ந்த இரண்டு கருத்துகளும் சரி. மற்றும் சரியான விளக்கம்
87.   வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுவது – மதிப்புக்கூட்டு வரியில்
88.   கால வரிசைபடி ஃ ரிக் –யசூர்-சாம-அதர்வணம்
89.   ஐந்தாண்டு திட்ட நோக்கங்கள்… 1-வேளாண்மை ஃ 2- கனரக தொழில் ஃ 3- வேளாண்மை தொழில் ஃ 4 - தன்னிறைவு
90.   பாபா – அணு ஆராய்ச்சி ஃ பட்நாகர் – பாதுகாப்பு அறிவியல் ஃ கோத்தாரி – அறிவியல் தொழில் ஆராய்ச்சி ஃ சாராபாய் – விண்வெளி ஆராய்ச்சி
91.   இந்திய குடியரசு தலைவர்கள் கடைசியாக பதவி வகித்தவர் அப்துல்கலாம் எனவே… 4231 விடை
92.   தொழில் வளர்ச்சி மற்றும் நிதி உதவி கீழ் வராதது – ITC
93.   பொதுத்துறை நிறுவனம் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் – ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்
94.   பிரதமர் அலுவலகம் நேரடி தொடர்பு கொண்டது –பிரதமரின் தேசிய நிவாரண நிதி மட்டும்
95.   சுவாசித்தல் நிறமியான இரத்த சிவப்பு அணு இல்லாதது – கரப்பான் பூச்சியில் ( அதன் இரத்தம் வெள்ளை )
96.   மகாநதி – அமர்காண்டாக் ஃ பெரியார் – கார்டமன் மலை ஃ கோதாவரி – நாசிக் ஃ கிருஷ்ணா – மகாபலீஸ்வரர் மலை (அணுமானம்)
97.   காலரா – பாக்டீரியா ஃ ஆப்பிரிக்கா தூக்க வியாதி – புரொட்டோசோவா ஃ மார்புச்சளி – வைரஸ் ஃ பொடுகு – பூஞ்சை
98.   காற்றாலை உள்ள மாவட்டங்கள் தூத்துக்குடி. கன்னியாகுமரி. திருநெல்வேலி
99.   சந்திராயன் 1 உடன் தொடர்பில்லாதது – அனைத்துடனும் தொடர்புண்டு ( நாசா அல்லது ONGC விடையாக இருக்கலாம்)
100.   இரண்டும் சரி சரியான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
101.   கள்
102.   புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
103.   வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
104.   புரை என்பது குறை என்றும் துப்பு என்பது உணவு என்றும் பொருள் கொள்ளப்படும் (அணுமானம்)
105.   திருக்குற்றால குறவஞ்சி – திரிகூட இராசப்பக்கவிராயர் ஃ இராவண காவியம் – புலவர் குழந்தை  ஃ மீனாட்சியம்மைக் குறம் – குமர குருபரர் ஃ தில்லைக்கலம்பகம் – இரட்டைப் புலவர் .
106.   பழிநாணுவானை – வினையாலணையும் பெயர்
107.   கற்றாள் – தன்வினை ஃ கற்பித்தாள் – பிறவினை ஃ ஆல் – செயபாட்டு வினை ஃ கல்லார் – எதிர்மறைத் தொடர்
108.   குறிஞ்சி – யாமம் ஃ முல்லை – மாலை ஃ மருதம் – வைகறை ஃ நெய்தல் – ஏற்பாடு
109.   கணம் –
110.   வீரமாமுனிவர் எழுதாதது –
111.    
112.   வையகம் புகழ் பெற்றது எதனால்?
113.   ஆற்று – என்பது ஆற்றீர் என்பதன் வேர்ச்சொல்
114.   மோனை தொடைக்கு தொடர்பில்லாதது – இரண்டாம் எழுத்தும் ஒன்றி வருவது
115.   நீர் வேலி – உருவகம் ( நீரை வேலியாக உருவகம் செய்தமை)
116.    செதுக்கப்பட்டது – செயப்பாட்டு வினை ஃ செதுக்கினார் – செய்வினை ஃ செதுக்குவாரா?- வினா வாக்கியம் ஃ என்னே! – உணர்ச்சி வாக்கியம்
117.   ஆர – நிறைய ஃ ஆற – தணிய ஃ ஊர – நகர ஃ ஊற – சுரக்க
118.   குரவர்  - ஆசிரியர் –ஃ குறவர் – ஓர் இனத்தார்
119.   வலை – சிலந்தி வாழிடம் ஃ வளை – துவாரம் ஃ வழை – புன்னை மரம்
120.   இயைந்தவர் வேர்ச்சொல் இயை
121.   யாருக்கு ஆறுதல் கூற இயலாது? என்பதே ”கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் ” என்பதன் வினா.
122.   அண்ணி – சுட்டுப் பெயர்
123.   உரையாசியரயச் சக்கிரவர்த்தி – மறைமலை அடிகள் ( அணுமானம்)ஷ
124.   ஒழி- நீக்கு ஃ கழி – தடி ஃ ஒளி – வெளிச்சம் ஃ களி – மகிழ்ச்சி
125.   தாழை – மடல் ஃ மா – இலை ஃ வேப்பம் – தழை ஃ தென்னை – ஓலை ( இவை மரபு சொற்கள் )
126.   நீரொட்டக யமக அந்தாதியில் – உதடுகள் ஒட்டாடு
127.   மாதானுபங்கி – திருவள்ளுவர்
128.   தாதூதி – தாது+ ஊதி
129.   பொருந்தா இணை – Rectal சரிகட்டக்கூடிய என்பது தவறானது.
130.   கூத்தராற்றுப்படை - மலைபடுகடாம்
131.   குட்டி தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
132.   நீர்வேலி – உருவகம் ஃ ஒருதனி – ஒருபொருட் பன்மொழி
133.   மாட்சி – பண்புப்பெயர்
134.   ஒட்டக்கூத்தர் – கவிராட்சசன் ஃ திருநாவுக்கரசர் – வாகீசர் ஃ பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் – திவ்ய கவி ஃ வாணிதாசன் – பாவலர் மணி
135.   சுந்தரன் – அனுமன்
136.   உச்சிமேற் புலவர்கொள் – நச்சினார்கினியர்
137.   Hypocrisy – கபாடம் தவறான தமிழ் பெயர்ப்பு
138.   துண்டு – நாண்மணிக்கடிகை
139.   ஓங்கு – பரிபாடல்
140.   Cell phone – தொலை பேசி என்பது தவறானது
141.   துற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் – துறத்தல்
142.   Mole – சிறுதுணுக்கு (மச்சம்)ஷ
143. பொருட்பெயர் – அத்திகோசத்தான் ஃ இடப்பெயர் – கொங்கன் ஃ தொழிற்பெயர் –ஈவான் ஃ. பண்புப் பெயர் - அந்தணன்
144. வினைத்தொகை – முக்காலமும் மறைந்து பொருந்தி வரும்
145. கருநிறம் – பண்புத்தொகை ஃ குருநிறம் – வினைத்தொகை
146. கல் – கற்றான் – பெயரெச்சம்
147. பார்குலாம் – தொழிற்பெயர் (பாருக்கெல்லாம் தலைவன்)
148. நந்தா விளக்கம் – மருதநில நூல் – பள்ளு
149. குறிஞ்சிக்கு – கம்பர்
150. செல் வினையெச்சம் சென்ற
151. குறிஞ்சி – முருகன் ஃ முல்லை – திருமால் ஃ மருதம் – இந்திரன் ஃ நெய்தல் – வருணன்
152. பொருந்தாத இணை – விரை – தளர
153. காட்டுக் கோழி – காடு+ கோழி
154. முன்னரண் _ முன்+ அரண்
155. தமிழ்மறை (திருக்குறள் ) – நான்மணிக் கடிகை பொருந்தாதது.
156. சுரம் * பாலை ( அணுமானம் )
157. பயில் வினைமுற்று பயின்றான்

Thursday, July 5, 2012

TET நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லையா?

உங்கள் கல்வி மாவட்ட DEO அலுவலகத்தினை இன்று காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கும்... TNPSC புத்தகங்களை இலவசமாக தரவிறக்கம் செய்யவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://tntet2012.blogspot.in/ 

 

 

http://tnpsc.examfree.in/ 

Wednesday, July 4, 2012

TNPSC அனைத்தும் இங்கே...

கீழ் இருக்கும் லிங்கை சொடுக்கி அனைத்து மின்னியல் புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..

http://tntet2012.blogspot.in/2012/06/subject-wise-study-materials-for-tntet.html 

Tuesday, July 3, 2012

TNPSC க்கு உதவும் மின்னியல் புத்தகங்கள்

டி.என்.பி.எஸ்.ஸி - பொது அறிவுகளின் களஞ்சிய அறிவால் கிடைக்கப்பெறும் வேலையை அளிக்கும்....


அதற்கான பொது அறிவு களஞ்சியமாக கீழே காணும் blog உள்ளது...

அதில் கிடைக்கும் மின்னியல் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

http://tntet2012.blogspot.in/2012/03/tn-tet-exam-2012.html

Friday, June 29, 2012